டுவிட்டர் மற்றும் டுவீடெக் ஆகிய இரண்டு சமூக வலைத்தளங்களின் சேவைகளும் அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்கு முடங்கியுள்ளது. 

இது உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக சர்வதேச செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன. 

டுவிட்டர் நிறுவனம் இது குறித்து சிக்கல்களை அறிந்திருப்பதாகவும் சிக்கலை விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே நேரடி மெசேஞ்களை (Direct Massages) பெறமாட்டீர்கள் அல்லது உங்கள் டுவீட்களில் படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை இணைப்பதில் சிக்கல் ஏற்படும் என டுவிட்டர் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, "நாங்கள் டுவிட்டர் மற்றும் டுவீட் டெக் சமூக தளங்களின் செயலிழப்புகளை அவதானித்து வருகிறோம். டுவீட் செய்வது, அறிவிப்புகளைப் பெறுவது அல்லது டி.எம்-களைப் பார்ப்பதில் பயனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். நாங்கள் தற்போது அதற்கு ஒரு தீர்வைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம், விரைவில் இயல்பு நிலைக்கு டுவிட்டர் மற்றும் டுவீடெக் சமூகதளங்கள் திரும்பும் என்று டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளது.