தமிழக சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காலை 10 மணி வரை அ.தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அ.தி.மு.க. கூட்டணி 118 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன. 

சென்னை டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். 5424 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். 

உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் 5325 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 

தமிழகத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது. தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16 ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது.

அ.தி.மு.க. 42 சதவீத வாக்குகளுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. தி.மு.க.வுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 

தே.மு.தி.க. படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.