ரயில்வே தொழிற்சங்கங்கள் 25.09  நள்ளிரவு முதல் தொடர் பணிபகிஸ்கரிப்பு காரணமாக  இன்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

ரயில்வே திணைக்களத்தின்  சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு குறித்த  தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவருகின்றது. 

குறித்த தொழிற்சங்க போராட்டத்தினால் வவுனியா ரயில் சேவைகள் பாதிக்கபட்டுள்ளதுடன், பயணிகள் அசௌகரியங்களையும் சந்தித்த வண்ணம் உள்ளதுடன் தொடரும் தொழிற்சங்க நடவடிக்கையால், பயணிகள் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது. 

தினசரி அதிகாலை 3.35 இற்கு வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்க வேண்டிய ரஜட்ட ரஜனி ரயில் வவுனியாவிலேயே தரித்து நிற்கின்றது. ரயில்வே பணிப்புறக்கனிப்பால் முன்பதிவு செய்தோர், பயணிகள் எனப் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.