மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவந்த 14 போ் இன்று அதிகாலை கைதுசெய்யபட்டுள்ளதாக பொகந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

மாணிக்கக்கல் அகழ்விற்க்காக குறித்த பகுதி ஒரு வருடத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கபட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

இதேவேளை, நேற்றயதினம் பொகந்தலாவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது. பொகவந்தலாவை பொலிஸாரால் 9பேரும் விசேட அதிரடிப் படையினரால் ஐந்து பேரும் கைது செய்யபட்டுள்ளதாகவும் மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன் படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனா்.

கைதுசெய்யபட்ட 14 பேரும் இன்றய தினம் அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.