ஹபரணை, ஹிரிவதுன்ன பகுதியில் ஏழு யானைகளின் இறப்பு குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

அரசாங்க ஆய்வாளரின் அறிக்கையை வெளியிடப்பட்ட பின்னர் ஒரு விரிவான அறிக்கை எதிர்பார்க்கப்படும்.

அதேவேளையில் இந்த குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று வனவிலங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.