நாடளாவிய ரீதியில் கடந்த 5 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டை முன்வைத்து குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அமைச்சரவை உப குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவிருந்த 2 பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ளன.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது நிர்வாக அதிகாரிகள் சங்கம் ஆகியன தொழிற்சங்க நடவடிக்கையைகளைக் கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.