கொழும்பு,  மருதானை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

கொழும்பு - மருதானை கொழும்பு வீதியின் ஆனந்தக் கல்லூரிக்கு அருகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயினை பெரும் சிரமத்திற்கு  மத்தியில் அணைத்துள்ளனர். 

எனினும் இதன்போது முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையாகியுள்ளது. 

இந்த சம்பவத்தினால் கொழும்பு - மருதானை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.