வேட்­பு­மனுவுக்கு முன்னர் சட்­ட­ரீ­தியில் தீர்வு - கூட்டு எதிரணி

Published By: J.G.Stephan

02 Oct, 2019 | 10:33 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­பதில் எவ்­வித மாற்­றுக்­க­ருத்­துக்­களும் கிடை­யாது. தற்­போது குடி­யு­ரிமை தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சைகள் அனைத்­திற்கும் வேட்­பு­மனு தாக்­க­லுக்கு முன்னர் சட்­ட­ரீ­தியில் தீர்வை பெற்றுக் கொள்வோம்  என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  சிசிர ஜய­கொடி தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று  செவ்­வாய்க்­கி­ழமை இடம்  பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,



பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை ஜனா­தி­பதி வேட்­பாளர் போட்­டியில் இருந்து  நீக்­கு­வ­தற்கு தற்­போது ஆளும் தரப்­பி­னரால் பல சூழ்ச்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் முன்னாள்  சொலி­ஷிட்டர் ஜெனரல் தில்­ருக்ஷி டயஸ் விக்­ர­ம­சிங்க  தற்­போது அர­சியல் அழுத்­தங்­களின் கார­ண­மா­கவே  பொய்­யான  வழக்­கு­களை தாக்கல் செய்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார்.  

நீதி­ய­மைச்சின் முன்னாள் செய­லாளர் சுஹத கம்லத் அமைச்­சர்­க­ளான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க , ராஜித சேனா­ரத்ன,  மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின்  தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க ஆகியோர் கோத்­த­பய ராஜ­ப­க்ஷவை கைது செய்­யு­மாறு  அழுத்தம் பிர­யோ­கித்­தார்கள்  என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­க­ளுக்கு அழுத்தம் கொடுத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான வழி­மு­றை­களை எதி­ரணி விரைவில் முன்­னெ­டுக்கும்.

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் குடி­யு­ரிமை தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சை­யினை தொடர்ந்து மாற்று  வேட்­பாளர் குறித்து எதி­ரணி ஆராய்­வ­தாக  ஆளும் தரப்­பி­னரால் வதந்­திகள் பரப்பி விடப்­ப­டு­கின்­றன. இது முற்­றிலும் பொய்­யான கருத்­தாகும். பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ என்­பதில் எவ்­வித மாற்று கருத்­துக்­களும் கிடை­யாது.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­படும் போது ஏதும் சட்ட சிக்­கல்கள் ஏற்­ப­டுமா என்­பதை முன்­கூட்டி ஆராய்ந்தே எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ முன்னாள் பாது­காப்பு  செய­லாளர் கோத்­த­பய ராஜ­ப­க்ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  அறி­வித்தார். ஆகவே இத்­தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­றங்­களும்  ஏற்­ப­டாது. எழுந்­துள்ள சவால்­க­ளுக்கு சட்ட மார்க்­கத்தின் ஊடா­கவே தீர்வை முன்­வைப்போம்.

நாடு தற்­போது எதிர்க் கொண்­டுள்ள நிலை­மை­யினை கருத்திற் கொண்டே பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ எதி­ர­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பய ராஜ­ப­க்ஷவை அறி­வித்தார் என்று  பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா குறிப்­பிட்­டி­ருந்தார்.
ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ எவ்­வி­ட­யத்தை கருத்திற் கொண்டு  அறி­விக்­கப்­பட்டார் என்­பதை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்கு அறிவார்.

மீண்டும் ஒரு முறையற்ற அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளமே இடப்படுகின்றது. ஆகவே யுத்தத்தை வெற்றிக் கொண்டவர் என்ற வகையில்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு எதிர் தரப்புடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10