logo

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் காயமடைந்த இரும்பக உரிமையாளர் பலி

Published By: Daya

02 Oct, 2019 | 10:54 AM
image

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலால்  இரும்பக உரிமையாளர் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த நிலையில் தடயவியல் பொலிஸார் நேற்றைய தினமே சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கடந்த மாதம்  செப்டெம்பர் 6ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்று இரும்பக உரிமையாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினமே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

யாழ்.கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லட்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் 47 வயதான கந்தையா கேதீஸ்வரன் என்பவரே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் செம்டெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.

இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் 24 நாள்களின் பின்னர் அவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு  உயிரிழந்தார்.

“சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் உரிமையாளரைத் தாக்கல் கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்தனர்” என்று உறவினர்கள் குறிப்பிட்டனர்.

இரும்பக உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவசர அவசரமாக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

உயிரிழந்தவரின் இறப்பு விசாரணையைப் போதனா வைத்தியசாலைக்குச் சென்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னெடுத்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான், வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று 25 நாட்களின் பின்னர் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் நேற்று சம்பவ இடத்தில் தாக்குதல் தொடர்பான தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தாக்குதல் நடந்த பின்னர் சில தினங்கள் இரும்பகம் திறந்து வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின்...

2023-06-10 16:08:17
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55