இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் கராச்சி மைதானத்தில் பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த 27 ஆம் திகதி கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்படது. இதன் பின்னர் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 67 ஓட்டத்தினால் வெற்றிபெற்று, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் இன்றைய தினம் மூன்றாவது போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

இப் போட்டியில் இலங்கை அணியினர் வெற்றிபெற்றிபெற்று தொடரை சமப்படுத்துவார்களா, அல்லது பாகிஸ்தான் அணியினிர் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.