SLIM வர்த்தக நாமச் சிறப்புகளுக்கான விருதுகள் வழங்கும் வைபவத்தில் இரு வெள்ளி விருதுகளை களனி கேபிள்ஸ் பி.எல்.சி. தனதாக்கியிருந்தது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 14 ஆவது SLIM வர்த்தக நாமச் சிறப்புகளுக்கான விருதுகள் வழங்கும் வைபவத்திலேயே பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் வயர்களை விற்பனை செய்வதில் இலங்கையின் முதல் தர வர்த்தக நாமமாக திகழும் களனி கேபிள்ஸ் பிஎல்சி இரு வெள்ளி விருதுகளை தனதாக்கியிருந்தது.
களனி கேபிள்ஸ் பெற்றுக் கொண்ட விருதுகளில் 'CSR Brand of the year' மற்றும் 'B2B Brand of the year' ஆகிய வெள்ளி விருதுகள் அடங்கியுள்ளன. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) வருடாந்தம் ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
களனி கேபிள்ஸ் பி.எல்.சி. யின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தியாளராக களனி கேபிள்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது நிறுவனம் தொடர்ச்சியாக சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக கல்வி, உலகத்தரம் வாய்ந்த அறிவு மற்றும் சூழல் ஊக்குவிப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டார்.
“SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் மூலமாக களனி கேபிள்ஸ் வர்த்தக நாமத்தினால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு கௌரவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும் வகையில் தம்மை அர்ப்பணித்துள்ள களனி கேபிள்ஸ் ஊழியர்களுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக அமைந்துள்ளது” என்றார்.
களனி கேபிள்ஸ் முன்னெடுக்கும் களனி சவிய சமூக பொறுப்புணர்வு செயற்பாட்டுக்காக வெள்ளி விருதொன்றை வென்றிருந்தது. இந்த திட்டத்தை பேராதனை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கிறது.
களனி சவிய செயற்திட்டம் என்பது, இலங்கை நிறுவனம் வகையில், 2007 ஆம் அண்டு களனி கேபிள்ஸ் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்துடன், 2015 பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னணி சமூக பொறுப்புணர்வு செயற்பாடு எனும் வகையில், களனி சவிய முக்கியத்துவம் பெறுகிறது. பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்களை பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு வழங்குகிறது.
களனி கேபிள்ஸ் பி.எல்.சி.யின் பொது சந்தைப்படுத்தல் முகாமையாளர் அனில் முனசிங்க கருத்து தெரிவிக்கையில்,
“இந்த விருதுகள் களனி கேபிள்ஸ் உற்பத்தி தரங்களையும் நிலையான விற்பனைகளையும் பேணுகின்றமையை உறுதி செய்துள்ளன.
இல்லங்கள், தொழிற்துறைகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு பொருத்தமான வகையில் உயர் தரம் வாய்ந்த வயர்களை நிறுவனம் உற்பத்தி செய்வதுடன், சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளின் மூலமாக, சமூகத்துக்கும் சூழலுக்கும் பெறுமதிகள் சேர்க்கப்படுகின்றன” என்றார்.
களனி கேபிள்ஸ் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,
“களனி கேபிள்ஸ் முன்னெடுக்கும் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள், சூழலை மேம்படுத்துவது மற்றும் சமூகத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இவற்றின் மூலமாக நிறுவனத்தின் வர்த்தக நாமங்களுக்கு அனுகூலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் 2015 விருதுகள் வழங்கும் நிகழ்வில் சமூகம் மற்றும் சூழல் ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்காக கௌரவித்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 46 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி “சுப்பர் பிரான்ட்” நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. களனி கேபிள்ஸ் 2008 இல் 'CNCI துறைசார் சிறப்புக்கான விருதை வென்றிருந்தது.
SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில், இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது.
SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
களனி கேபிள்ஸ் பிஎல்சி 2015 இல் ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமமாகவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM