இராணுவத்திலிருந்து தப்பிக்க 81 வயது பாட்டியை திருமணம் செய்துகொண்ட 24 வயது இளைஞர் !

Published By: Digital Desk 4

01 Oct, 2019 | 06:04 PM
image

உக்ரையின் நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மாற்றுத் திறனாளியான  81 வயது பாட்டியை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரையின் நாட்டு பிரஜைகள் இராணுவத்தில் சேரவேண்டியது கட்டாயமாகும். ஆனால் சில விதி விலக்குகள் உள்ளன. தமது  மனைவி மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டும்,  அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் கணவருக்கு இராணுவத்தில் சேர்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ் விதிவிலக்கை சாதகமாக்கிகொண்ட உக்ரையின் நாட்டு 24 வயதான அலெக்ஸாண்டர் கொன்ட்ராட்யுக் என்ற இளைஞர்,  தனது திருமண உறவு முறையை கொண்ட 81 வயதான ஸினைடா இல்லாரியோனோவ்னா எனும் பாட்டியை .திருமணம் செய்துள்ளார். 

 ஒவ்வொரு முறையும் இராணுவத்திலிருந்து  ஆள்சேர்ப்புக்கு வரும் போதும் தனக்கு திருமணமான சான்றையும், தன் மனைவியின் மாற்றுத் திறனாளி சான்றையும் காண்பித்து இராணுவத்தில் சேர்வதில் இருந்து தப்பியுள்ளார் இந்த இளைஞர்.

இருப்பினும் இருவரும் போலியான திருமண வாழ்க்கை வாழ்வதாகவோ அல்லது இருவருக்கும் பொதுவான பொருட்கள் வீட்டில் இல்லை என கருதப்பட்டாலோ திருமணத்தை இரத்து செய்து இராணுவத்தில் சேர்க்கலாம் என அந்நாட்டு  சட்டம் கூறுகின்றது.

 ஆனால், அவர் சட்டத்திற்கு அமைவாக திருமணம் செய்த  சான்று மற்றும் மாற்றுத் திறனாளியான  மனைவியின் பாதுகாவலராக பதிவுசெய்யப்பட்டுள்ளதாலும் இராணுவத்தில் சேர வேண்டிய அவசியமில்லை என ஆணையாளர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஒமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-12 17:02:18
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57
news-image

முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா...

2026-07-12 12:00:22
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான்...

2026-07-12 15:45:39
news-image

கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி உயர்...

2026-07-12 11:07:51
news-image

கனடாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி,...

2026-07-12 08:57:33
news-image

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து :...

2026-07-11 16:41:25
news-image

என்னைத் படுகொலை செய்ய முயன்றால் ஈரான்...

2026-07-11 13:44:03
news-image

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி : ஈரானிய...

2026-07-11 13:30:51
news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46