(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக பெற்றுக் கொண்டுள்ள 26 பில்லியன் அமெரிக்க டொலர் அரசமுறை கடனுக்கு எவ்வித அபிவிருத்திகளையும்,  மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தையும் மேம்படுத்தவில்லை. 

அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் செலவிடும் அனைத்து தேசிய நிதியின் தாக்கத்தை இறுதியில் நாட்டு மக்களே ஈடு செய்ய வேண்டும் என தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விசேட ஊடக அறிக்கையொன்றினை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன்கள் இன்று தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய சவாலாக காணப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது காணப்பட்ட 7.39 ரில்லியன்  அரச முறை கடன் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் 12.64 ரில்லியனாக அதிகரித்துள்ளது.

இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் கடன்பெறும் வீதம் 71 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.