(ஆர்.விதுஷா)

திருகோணமலை - சீனக்குடா  கடற்பரப்பில்  தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை உபயோகித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட  ஐவர் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

கிழக்கு  கடற்படையினர் திருகோணமலை - சீனக்குடா கடற்பரப்பில் மேற்கொண்டிருந்த ரோந்து நடவடிக்கையின்  போது   மீன்பிடிப்படகொன்று  அவதானிக்கப்பட்டுள்ளது. அந்தபகுதிக்கு  விரைந்த  கடற்படையினர்  சோதனை  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  

இதன் போது மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை  உபயோகித்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அந்த படகில் பயணித்த  ஐவரும் கைது  செய்யப்பட்டனர்.  

சந்தேக நபர்கள் கிண்ணியா பகுதியை சேர்ந்த 33 வயதிற்கும் 60 வயதிற்கும்  இடைப்பட்ட வயதையுடையவர்கள் என  விசாரணைகளின்  போது   தெரிய வந்துள்ளது.  அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்டமீன்பிடி வலைகள் அவர்களின் மீன்பிடி படகு  என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சந்தேக நபர்களையும் அவர்களிடமிந்த கைப்பற்றிய பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  திருகோணமலை கடல்வளத்துறை உதவி பணிப்பாளரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.