பேலியகொட பிரதேசத்தில் நேற்று விபச்சார விடுதி ஒன்றை சுற்றிவளைத்து சந்தேக நபர்களான 3 பெண்களை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு நீதிமன்றில் இருந்து பெற்றுக்கொண்ட சோதனை உத்தரவுக்கமைய இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு முகாமையாளரான பெண் ஒருவரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கருதப்பப்டும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, பிலிமத்தலாவ, நாத்தாண்டியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 39,37 மற்றும் 21 வயதானவர்களாவர். இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்