(இரா.  செல்வராஜா)

ஹபரணைக்காட்டுப்பகுதியில் மேலுமொரு யானை துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யானையின்  தலையிலும்  உடம்பிலும்  பல துப்பாக்கிச்சூட்டு காயங்கள்  காணப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள பொலநறுவை  பிராந்திய அத்தியச்சர்; டபிள்யு.டி .ஜே.  விக்கிரமசிங்க  தெரிவித்தனர்.

கடந்த மாதம்,28,29,30 ஆகிய தினங்களில் ஏழு யானைகள் ஹபரணை காட்டுப்பகுதியைச்சேர்ந்த ஹிரிவட்டுண தும்பிக்குளம் ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்த இறந்த  யானைகளின் இரசாயணப்பகுப்பாய்வு  அறிக்கையினை வன ஜீவராசிகள் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.  

இதேவேளை,கடந்த மூன்றாண்டுகளில் 176 யானைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 68 பொதுமக்களும் யானைத்தாக்குதலால்  உயிரிழந்துள்ளனர்.

2016  ஆம் ஆண்டில் 76  யானைகள் கொல்லப்பட்டிருப்பதுடன், 21 பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளனர்.2017ஆம்  ஆண்டு  44  கொல்லப்பட்டிருப்பதுடன்  ,  16  பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு 76 யானைகளும் ,யானைதாக்கியதால் 26  பொதுமக்களும் உயிரிழந்திருப்பதாக  பொலநறுவை  மாவட்ட  வனஜீவராசிகள்  திணைக்கள  அத்தியச்சர்   டபிள்யு.டி .ஜே.  விக்கிரமசிங்க  இதனை தெரிவித்தார்.