ஈகுவடாரி என்ற இடத்தில் மாடியிலிருந்து விழுந்த நிலையில் காதல் ஜோடியொன்றின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஈகுவடாரில் உள்ள குவிட்டோவை சேர்ந்தவர் 28 வயது பெண்ணிற்கு  8 வயதில் பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் இந்த இளம் பெண் இரு பட்டங்களை பெறவுள்ளதை கொண்டாடும் வகையில் வீட்டில் ஒரு விருந்துபசாரத்திற்கு  ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்துபசாரத்திற்கு தனது நண்பர்களை அழைத்திருந்தார். அப்போது தனது 35 வயது காதலனையும் அழைத்திருந்தார். இந்நிலையில், விருந்துபசாரம் முடிந்தவுடன் அனைவரும் சென்றவிட்ட நிலையில், காதலன் மட்டும் வெளியே செல்லாமல் அந்த பெண்ணின் வீட்டிலேயே இருந்தார். அப்போது குழந்தையை அறையில் தூங்க வைத்துவிட்டு இவர்கள் இருவரும் மாடத்திற்கு (பெல்கனி)சென்றனர்.

அப்போது நீண்ட நேரம் பேசி கொண்டிருந்த இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் 3ஆவது மாடியின் மாடத்திலிருந்து (பெல்கனி) கீழே விழுந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற நேரம், நள்ளிரவு என்பதால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. காலை விடிந்தவுடன் வீட்டுக்கு அருகே நிர்வாண நிலையில் ஜோடியின் சடலம் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றினர்.

இருவரும் மாடத்திலிருந்து (பெல்கனி) தவறி விழுந்தனரா, இல்லை யாரேனும் தள்ளிவிட்டனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும், அநாதையான  அந்த பெண்ணின் 8 வயது குழந்தை அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.