தனக்கு எதிரான விசாரணையிலிருந்து தப்புவதற்காக அவுஸ்திரேலிய பிரதமரின் உதவியை நாடினாரா டிரம்ப்? சர்வதேச அரசியலில் புதிய சர்ச்சை

Published By: Rajeeban

01 Oct, 2019 | 01:28 PM
image

அமெரிக்காவில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரை கேட்டுக்கொண்டார் என வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அரசியலில்; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 ஜனாதிபதி தேர்தலின் போது  டிரம்ப் ரஸ்யாவுடன் இணைந்து செயற்பட்டார என்பது குறித்து விசாரணை செய்யும் மியுல்லர் விசாரணையின் ஆரம்பத்தை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்மொறிசனிடம் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணையை நம்பகதன்மையற்றதாக காண்பிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரை கேட்டுக்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கமும் இதனை உறுதி செய்துள்ளதுடன் இது தொடர்பில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபிடெனை விசாரணை செய்யுமாறு டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதியை கோரியது தொடர்பில் அரசியல் கண்டனப்பிரேரணையை எதிர்கொண்டுள்ள தருணத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமருக்கும் டிரம்பிற்கும் இடையிலான உரையாடல் குறித்த விபரங்கள் வழமைக்கு மாறாக வெள்ளை மாளிகையின் சில அதிகாரிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் ரஸ்ய தொடர்பு குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு எப்போதும் தயார் என தெரிவித்ததாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17