இம்­மாத இறு­தியில் தீபா­வளி பண்­டிகை கொண்­டா­டப்­பட உள்­ளது. இந்­நி­லையில் இது­வ­ரையில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஐம்­பது ரூபா சம்­பள கொடுப்­ப­னவு கிடைக்­கப்­பெ­ற­வில்லை. தொழிற்­சங்­கங்­களால் தோட்டத் தொழி­லா­ளர்கள் கைவி­டப்­பட்டு விட்­டனர் எனத் தெரி­வித்­துள்ள தொழி­லா­ளர்கள் பண்­டி­கையை முன்­னிட்டு தீபா­வளி முற்­ப­ணத்­தை­யேனும் விரை­வாக வழங்­கு­வ­தற்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஆவண செய்­யு­மாறும் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இது தொடர்பில் கண்டி மாவட்­டத்தின் சில தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் கருத்துத் தெரி­விக்­கையில்,

தீபா­வளி என்­பது இந்­துக்­களின் முக்­கிய பண்­டி­கை­யாகும். குறிப்­பாக தோட்டத் தொழி­லா­ளர்­களை பொறுத்­த­வரை தீபா­வளி பண்­டிகை சிறப்­பாக கொண்­டா­டு­வது வழக்­க­மாகும். தீபா­வளி நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் இது­வ­ரையில் தீபா­வளி பண்­டி­கைக்கு கட­னாக வழங்கும் முற்­ப­ணத்தை பெற்­றுக்­கொ­டுப்­பது குறித்தோ அல்­லது அதனை வாழ்க்கைச் செல­வுக்­கேற்ப அதி­க­ரித்துக் கொடுப்­பது தொடர்­பிலோ எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­களோ அல்­லது தொழிற்­சங்­கங்­களோ ஆர்வம் காட்­டாமை கவ­லை­ய­ளிக்­கி­றது.

தீபா­வளி வரு­வ­தற்கு ஒரு வார­மி­ருக்­கும்­போது தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தீபா­வளி முற்­பணம் கிடைக்­கப்­பெ­று­வது வழ­மை­யாகும். இலங்­கை­யி­லுள்­ள அரச தனியார் துறை­களில் தொழில் புரியும் ஊழி­யர்­க­ளுக்கு நேர­கா­லத்­தோடு பண்­டிகை முற்­பணம் வழங்­கு­வது வழக்­க­மாகும். இப்­போது மலை­யக அர­சி­யல்­வா­தி­களும் தொழிற்­சங்­க­வா­தி­களும் ஜனா­தி­பதி தேர்தலில் செலுத்தும் கவனம், அக்­கறை என்­ப­வற்றை தோட்டத் தொழி­லா­ளர்­களின் தீபா­வளி முற்­பண விட­யத்தில் காட்­டு­வ­தாக இல்லை.

தீபா­வளி நெருங்­கும்­போ­துதான் அர­சி­யல்­வா­தி­களும் தொழிற்­சங்­க­வா­தி­களும் போட்டி போட்டுத் தீபா­வளி முற்­ப­ணத்தின் தொகையை அதி­க­ரித்து வழங்­கும்­படி அறிக்கை விடு­வார்கள். அது­மட்­டு­மல்ல  தீபா­வளித் தினத்­தன்று ஊட­கங்­களில் மலை­யக மக்கள் வாழ்வில் இருள் நீங்கி தீப ஒளி பிர­கா­சித்து வாழ்வு மலர வேண்டும் என்று வாழ்த்­துக்­களும் தெரிவிப்பர்.

இதனால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எவ்­வித நன்­மையும் இல்லை. ஒவ்­வொரு வரு­டமும் தோட்டத் தொழி­லா­ளர்கள் தமது குறைந்த வருமானத்தில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாது திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி முற்பணம் நேரகாலத்தோடு கிடைப்பதற்கு அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதி களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.