(நா.தினுஷா)

கால­நிலை மாற்றம் இன்று உல­க­ளா­விய பார­தூ­ர­மான பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நல்­வாழ்­வுக்­காக  கால­நிலை மாற்­றத்­துக்கு ஏற்ற  புதிய திட்­டங்கள் வகுக்­கப்­பட வேண்டும் என்று  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

உலக புது­ப்பிக்­கத்­தக்க எரி­சக்தி மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் நேற்று திங்­கட்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்­றது.  இந்த நிகழ்வில் அமைச்சர்  சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டார்கள்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கால­நிலை மாற்றம் இன்று உல­க­ளா­விய ரீதி­யான பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. சுற்றுச்சூழல் மாச­டைதல் காலநிலை மாற்­றத்­துக்கு பிர­தான கார­ண­மாக இருந்து வரு­கி­றது. மேலும் அயல் நாடு­களில் ஏற்­படும் மாற்­றங்கள், சனத்­தொகை அதி­க­ரிப்பு போன்ற செயற்­பா­டு­களும் இந்த கால­நிலை மாற்­றத்­துக்கு முக்­கிய கார­ண­மாக இருக்­கின்­றன.  இந்த சுற்றுச்சூழல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­கா­கவே பாரிஸ் உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டது.  எது எவ்­வா­றா­யினும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அந்த உடன்­ப­டிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாமல் போயுள்­ளது.  

1979 ஆம் ஆண்டு நான் சீனா­வுக்கு சென்­ற­போது மிதி வண்­டி­களை அந்த மக்கள்  அதி­க­மாக பயன்­ப­டுத்­தி­னார்கள். அத­னூ­டாக எந்த சக்தி வீண்­ வி­ர­யமும் இருக்க வில்லை. ஆனால் இன்று அங்கு பெரும்­பாலும் மோட்டார் வாக­னங்­களே அதி­க­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அத­னூ­டாக பாரி­ய­ள­வான சக்தி விர­யமும் இடம்­பெ­று­கி­றது. இது குறித்து அதிக கவனம் செலுத்­து­வது அவ­சி­ய­மாகும். அநே­க­மா­ன­வர்கள் சைக்­கிள்­களை இன்று உடற்பயிற்­சிக்­காக மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­து­கி­றார்­களே அன்றி அவர்கள் பிரயாண செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வது இல்லை.

2015ஆம் ஆண்டு இந்த அர­சாங்­கத்தை நாங்கள் பொறுப்­பேற்­றுக்­கொண்­ட­போது பாரிய நக­ரங்கள் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சை சம்­பிக ரண­வக்­க­விடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தோம். தற்­போது அந்த அமைச்­சி­னூ­டாக சூழ­லுக்கு நேய­மான  பாரிய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. காலநிலை ­மாற்­றத்தில் இலங்­கையின் நிலைப்­பாடு எவ்­வா­றா­னது என்­பது  குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும்.  

இலங்கை இந்து சமுத்­தி­ரத்தின் முத்­தாக காணப்­ப­டு­கி­றது. ஆகவே நவீன நக­ரத்­ திட்­டங்­களை  முன்னெடுக்க வேண்டிய அவசியமும் தற்போது எமக்கு எழுந்துள் ளது.  அதேபோன்று  ஜனநாயகம், இன நல் லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பு வது குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண் டியதும் அவசியமாகும். எதிர்கால சந்ததி யினருக்கு ஏற்ற சூழல்களை உருவாக்கி கொடுப்பதும் அவசியமாகும்.