சர்வதேச சிறுவர் தினமான இன்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10மணிக்கு குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுத்திரு,கையளிக்கபட்ட மாணவர்கள் எங்கே, குடும்பமாக ஒப்படைக்கபட்ட சிறுவர்கள் எங்கே,

பத்துவருடங்கள் காத்திருந்தோம் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டும், போன்ற பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன். இலங்கையில் காணாமல் போன தமிழ் சிறுவர், மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களையும் கையில் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரொன்றும் இதன்போது அனுப்பி வைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, பிரதேச்சபை உறுப்பினர்கள், பொதுமக்கள்,சிறுவர்கள், என பலர் கலந்துகொண்டனர்.