(இரா.செல்வராஜா)

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அதிகார பரவலாக்கள் இன பிரச்சினைக்கு தீர்வு ஆகிய விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்ப்பதாக விசேட பிரதேசங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது. 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு எமக்கு முக்கியமானதாகும். அது போல் அதிகார பகிர்வும் புரையோடி போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணும் மிக முக்கியமான விடயங்களாகும். 

இது தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். வருமானம் பற்றாக்குறை காரணமாக கடன் படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு எமது முதல் கோரிக்கையாகும். மலையகத்துக்கு தனியான பல்ககைகழகம் வேண்டும் என்ற நிலைபாட்டிலேயே நாங்கள் இருக்கிறோம். மலையக இளைஞர் யுவதிகள் அரச வேலைவாய்ப்பில் புறக்கனிக்கப்படுகின்றனர். 

ஆசிரியர் நியமனங்கள் மாத்திரமே வழங்கப்படுகிறது. ஏனைய அரசியல் துறை நியமனங்களில் எம்மவர்களுக்கும் நியமனங்களை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரோமதாசவின் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.