வவுனியாவில் மடுகந்தை பகுதியில் நேற்று (30.09) துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் நேற்று  மாலை 4.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி துப்பாக்கி (சொக்கன்) வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரப்பன்மடுவ மடுகந்தை வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி (சொக்கன்) ஒன்றை வைத்திருந்ததன் பேரில் ஜெயவர்த்தனகே நிஹால் (வயது-61) என்பவரை சொக்கன் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுகந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.