தனது காத­லியின் தாயாரை இர­க­சி­ய­மாக திரு­மணம் செய்து விவா­க­ரத்துப் பெற்ற பின்னர், தனது காத­லியை மீண்டும் திரு­மணம் செய்த இளைஞர் ஒரு­வரை பொலிஸார் கைது­செய்த சம்­பவம் எகிப்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தச்­சு­வே­லையில் ஈடு­பட்டு வந்த மேற்­படி இளைஞர் 3 வரு­டங்­க­ளுக்கு முன்னர் குறிப்­பிட்ட யுவ­தியைக் கண்டு தனது காதலைத் தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் அந்த யுவ­தியின் தாயும் தந்­தையும் பிரிந்த நிலையில் அந்த நபர் தனித்து வாழ்ந்த யுவ­தியின் தாயா­ரிடம் காதல் கொண்டு அவரை இர­க­சி­ய­மாக திரு­மணம் செய்­துள்ளார்.

எனினும் அவர்­க­ளது திரு­மணம் தேனி­ல­வுக்கு சென்று சில நாட்­க­ளி­லேயே முறி­வ­டைந்ததையடுத்து அவர் யுவ­தியின் தாயா­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்துப் பெற்றார்.

தொடர்ந்து தனது முன்னாள் மனை­வியின் மக­ளான தனது காத­லி­யிடம் திரும்­பிய அந்த இளைஞர், அவரை திருணம் செய்­துள்ளார்.

இதன்­போது தனது புதிய மனை­வி­யிடம் அவ­ரது தாயாரை தான் ஏற்­க­னவே திரு­மணம் செய்து விவா­க­ரத்துப் பெற்­றுள்­ளதை இளைஞர் கூறவும் சின­ம­டைந்த அந்த இளம் மனைவி, அது தொடர்பில் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

அந்த இளைஞர் ஏற்­க­னவே திரு­மணம் செய்து விவ­ாக­ரத்துப் பெற்றதை மறைக்க போலி ஆவணங்களைத் தயாரித்து சமர்ப் பித்திருந்ததாக கூறப்படுகிறது.