வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்குள்ளான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

01 Oct, 2019 | 10:39 AM
image

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று  இரவு உயிரிழந்தார்.

எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.

இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், நேற்று வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் 24 நாட்களின் பின்னர் இன்று இரவு 9.30 மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

“சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் உரிமையாளரைத் தாக்கல் கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

எனினும் உரிமையாளர் உயிரிழந்தவுடன் தற்போது உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு தற்போது ( நேற்று 10.30 மணி) கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்” என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28