அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் எம்பன்டன் பார்க் (Hampton Park) மேல் நிலை கல்லூரியில் கல்வி பயிலும் ரொரென்சோ ஜூரியன்ஸ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேல்போர்ன் நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாலையில் ரொரென்சோ ஜூரியன்ஸ் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர் படுகாயமடைந்த ரொரென்சோ ஜூரியன்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது.

லொரென்சோ ஜுரியன்ஸ் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்று குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.