சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­தாபய ராஜ­பக்ஷ தனது  அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை ரத்துச் செய்­து­கொண்­டு­விட்டார் என்று தெரி­விக்கும் வகை­யி­லான   ஆவ­ணங்­களை  கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காஞ்­சன விஜே­சே­கர நேற்று வெளியிட்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காஞ்­சன விஜே­சே­கர தனது டுவிட்டர் தளத்தில் இந்த ஆவ­ணங்­களை  நேற்று வெளியிட்டார்.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தாபய ராஜ­ப­க்ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்­கொள்­வதை தடுக்­கு­மாறு  நேற்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில்  தாக்கல் செய்­யப்­பட்ட மனு  விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ள­ப­ட­வுள்ள நிலை­யி­லேயே  இவ்­வாறு ஆவ­ணங்கள்   வெளியி­டப்­பட்­டுள்­ளன.

இவ்­வ­ருடம் மே  மாதம்  23 ஆம் திகதி திகதியிடப்பட்ட நிலையில் இந்த ஆவணங்கள் வெ ளியிடப்பட்டுள்ளன.