பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இருபது வருடங்களிற்கு முன்னர் இரு பெண்களுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.

சார்லொட் எட்வேர்டஸ் என்ற பத்தி எழுத்தாளர் 20 வருடத்திற்கு முன்னர் பொறிஸ்ஜோன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என சண்டேடைம்ஸில் எழுதியுள்ளார்.

1999 இல் நான் ஸ்பெக்டேட்டர் சஞ்சிகையின் ஆசிரியராகயிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதிய உணவின் பின்னர் நான் இதனை எனது சக ஊழியரிடம் தெரிவித்துள்ளேன்,அதற்கு பொறிஸ்ஜோன்சன் தன்னிடமும் அவ்வாறு நடந்துகொண்டார் என தனது சகா தெரிவித்தார் என சார்லொட் எட்வேர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என பிரிட்டிஸ் பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள எட்வார்டஸ் பொறிஸ்ஜோன்சனிற்கு அது நினைவில்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த சம்பவம் நன்கு நினைவில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எட்வார்டசின் இந்த குற்றச்சாட்டிற்கு பிரிட்டனின் செய்தித்தாள்கள் மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளன.

இது அதிகார துஸ்பிரயோகம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.