நீடிக்கும் இயற்கைப் பேரவலம் ;பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

Published By: Raam

19 May, 2016 | 07:42 AM
image

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 120 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். அத்துடன் மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 82 ஆயிரத்து 924 குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்து 23 ஆயிரத்து 687 க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இடம்பெயந்துள்ள 48 ஆயிரத்து 998 குடும்பங்கள் சுமார் 375 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அத்துடன் மண்சரிவு , வௌ்ளபெருக்கு மற்றும் காற்றினால் 3000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் அரநாயக்க மற்றும் புலத் கொகுபிட்டிய போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அரநாயக்க மண்சரிவில் மூன்று கிராமங்கள் முழுமையாக புதையுண்டன. கேகாலை மாவட்டத்தில் மேற்குறித்த அனர்த்தங்களின் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளளனர். 50 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்காக 260 க்கும் மேற்பட்ட இராணுவ படையின் களமிறங்கியுள்ளனர்.

அத்துடன் புளத்கொஹுபிட்டிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 6 லயன் குடியிருப்புகள் மண்ணில் புதையுண்டன. இதில் 16 பேர் காணாமல் போனதுடன் இதுவரை மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்றைய தினத்தில் களினி கங்கையின் நீர் மட்டம் 7 மீற்றர் வரை அதிகரித்திருந்தது. இதனால் களனி , நவகம்புர, வெல்லம்பிட்டி, அவிசாவளை, ஹங்வெல்ல ஆகிய பகுதிகளுக்கே பாதிப்புகள் ஏற்பட்டது. ஐந்து நாள் தொடர் மழைவீழச்சியினால் கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு அதிகளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

நேற்றைய தினம் கொழும்பு நகரில் குறைவான மழைவான மழைவீச்சே பதிவானது. காலை நேரங்களில் வழமையான காலநிலை இருந்தது. இருந்தபோதிலும் வெல்லம்பிட்டி, களனி, அவிசாவளை உள்ளிட்ட பகுதிகளில் நீர் வடிந்தோடவில்லை. இதன்காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அத்துடன் நேற்றைய தினம் போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் பல இடங்களில் வழமைக்கு திரும்பியிருந்தது. இருந்தாலும் களனி பிரதேசத்தில் வௌ்ளம் பெருக்கின் காரணமாக பாலத்துறை மற்றும் கொழும்பு கண்டி வீதியின் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதேவேளை நேற்றைய தினம் தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் சேவை மற்றும் மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது.

அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக கல்வி நடவடிக்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் வடமேல் , சப்ரகமுவ, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. எனினும் வௌ்ளம் மற்றும் மண்சரிவுக்குட்பட்ட பிரசேதங்களில் மாத்திரம் பாடசாலை இன்றைய தினமும் மூடப்பட்டிருக்கும்.

கொழும்பு மாவட்டம்

நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு மாவட்டத்திற்கே அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்பிரகாரம் கொழும்பு நகரின் வெல்லம்பிட்டிய , கொலன்னாவை உள்ளிட்ட பிரசேதங்களிலிருந்து நேற்றைய தினமும் மக்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் காணப்பட்டனர். காலை வேளைகளில் பெரும்பாலான பகுதிகளில் நீர் வடிந்தோட தொடங்கியதை அவதானிக்க முடிந்தது. கொழும்பு நகரில் வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவை பிரசேதங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டன. குறித்த பிரசேதங்களில் மாத்திரம் 18 ஆயிரத்து 756 குடும்பங்களை சேர்ந்த சுமார் 94 ஆயிரத்து 151 பேர் 16 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 35ஆயிரத்து 839 குடும்பங்களை சேர்நத 1 இலட்சத்து 71 ஆயிரத்து546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 ஆயிரத்து 725 குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 70ஆயிரத்து 403 பேர் இடம்பெயர்ந்து 62 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா , களுத்துறை

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 19 ஆயிரத்து 174 குடும்பங்களை சேர்ந்த 76 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 ஆயிரத்து 490 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 6083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை ,இரத்தினபுரி

இதேவேளை நேற்று முன் தினம் மாலை அரநாயக்க மற்றும் புலத் கொகுபிட்டிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனரத்ததின் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளளனர். 50 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்காக 300 க்கும் மேற்பட்ட இராணுவ படையின் களமிறங்கியிருந்தனர். இது தொடர்பிர் இன்றைய தினமும் மீட்பு பணிகள் மும்முரமாக இடம்பெறவுள்ளது. கேகாலை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேகாலையில் இதுவரைக்கும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 20 மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்

இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் காற்று , மழை காரணமாக 1568 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2855 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மலையகம்

நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் நேற்றைய தினம் மலையகத்தில் கடும் மழை பெய்தது. இதன்காரணமாக பல பிரசேதங்கள் நீரில் மூழ்கியதுடன் மண்சரிவு அனர்த்தம் பல இடங்களுக்கு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக நேற்று முன் தினம் கண்டி மாவட்டத்தில் கடுகண்ணாவ பிரதேத்தில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இதனால் ஆறு பேர் மண்சரிவில் சிக்குண்டனர். அதேபோன்று தெல்தொடை, நாவலப்பிட்டிய, கலகெதர போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

மேலும் நுவரேலியா மாவட்டத்தில் 25 குடும்பங்களை சேரந்த 2800 பேர் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் பாதிப்பு குறைவாகவே பதிவாகியுள்ளது.

வடக்கு ,கிழக்கு

வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 10 ஆயிரத்து 600 குடும்பங்களை சேர்ந்த 36 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 குடும்பங்கள் இடம்பெயர்ந்து நான்கு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்பிரகாரம் 5585 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 47 பேர் பாதிப்படைந்து 1163 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மாத்திரம் ஆயிரத்து 572 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரம் பேர் வௌ்ள பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் நகரிலேயே அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 1100 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 127 பேர் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 1488 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் முல்லைதீவு மாவட்டத்தில் 239 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. மேலும் கிளிநொச்சியிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது.

அதேபோன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற பிரசேதங்களில் 80 மேற்பட்ட மீன்பிடி படகுகள் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக சேதமடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் குறைந்தளவிலான பாதிப்புகளே பதிவாகியுள்ளன. இருந்தபோதிலும் திருகோணமலை மாவட்டத்தில் 14 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

குருநாகல் , புத்தளம்

வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திற்கே அதிகளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 6378 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வான்கதவுகள் திறப்பு

லக்ஷபான , விக்டோரியா , கலாவெவ உள்ளிட்ட நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் களனி கங்கை ,மானிக்க கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளன.இராஜாங்கனை , பொல்கொல்ல நீர்தேக்கங்களில் வான் கதவுகளும் திறக்கப்பட்டன. இராஜாங்கனை வான்கதவு திறக்கப்பட்டமையினால் பல பிரதேசம் நீரில் மூழ்கின.

காலநிலை

நான்கு நாட்களாக தொடர்ந்து நிலவும் காலநிலையின் பிரகாரம் தாழமுக்கம் தற்போது வடக்கு மாகாணத்திலிருந்து பயணித்த வண்ணம் உள்ளது . இதன்படி குறித்த தாழமுக்கம் வடக்கு ஊடாக இந்தியாவை நோக்கி நகரும். இருந்தபோதிலும் நாட்டின் கடலோர பகுதிகளில் கடும் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் கடலோர பகுதிகளில் கடும் காற்று நிலவும் என்பதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

நாட்டில் மத்திய ,மேல் ,சப்ரகமுவ மாகாணங்களுக்கு தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41