(செ.தேன்மொழி)

அரலகங்வில பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரலந்த , றூஹூகம பகுதியில்  இன்று நபரொருவர் காட்டுயானைனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் 47 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

உயிரிழந்த நபர் தனக்கு சொந்தமான வயல்வெளியை பார்வையிட்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்த போதே காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என அரலகங்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.