திருகோணமலை, கன்தமலாவ பகுதியில் குளவிக் கொட்டுக்குள்ளான பாடசாலை மாணவர்கள் 3 பேர், கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்படி பகுதியைச் சேர்ந்தவர்களான பீ.சதுனி (12) ஈ.தறூஷ (11), கே.சதறுவன் (12) ஆகியோரே குளவிக் கொட்டுக்குள்ளாகினர்.

இவர்கள் மூவரும் இன்று காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் காணப்பட்ட புளியம்மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூட்டுக்கு இவர்களில் ஒருவர் கல் வீசியுள்ளார். இதனையடுத்து, கூட்டிலிருந்த குளவிகள் கலைந்துவந்து இவர்களைக் கொட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.