ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி களமிறங்குவதா அல்லது ஆதரவளிப்பதா என்பது குறித்து இன்று இடம்பெறவுள்ள அக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று கூடும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இயன்றளவு இறுதித் தீர்மானத்தை எடுக்கவே முயற்சிப்பதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி ஆகிய விடயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.