கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அனைத்து தகவல்களையும் முறைப்பாடுகளையும் எழுத்து மூலம் விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை, தபால் மூலமாக அனுப்பி வைக்க முடியும். முறைப்பாடுகளை அனுப்ப வேண்டிய முகவரி முதலாம் மாடி, தொகுதி எண் 5 பண்டாரநாயக்க சர்வதேச  ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பௌத்தலோகா மாவத்தை, கொழும்பு 07.