நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, குருநாகலையில் நடைபெறவிருந்த மஹிந்தவின் “யுத்த வெற்றி விழா” இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இம்முறை யுத்த வெற்றிதின விழாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை.  இந் நிலையில் மஹிந்த அணியினர் நாளை குருநாகலில் தமது இராணுவ வெற்றி தின கொண்டாட்டங்களை நடத்தயிருந்தனர்.

மேலும், மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொள்ளும் குருநாகல் நிகழ்வில் இராணுவத்தின் அதிகாரிகளோ, சிப்பாய்களோ கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.