வவுனியா நகரசபை, வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட துப்பரவு பணி வவுனியாவில் இன்று முன்னெடுக்கபட்டது.

வவுனியா நகரசபை வளாகத்தில் இருந்து ஆரம்பமாகிய சிரமதான பணி பொதுவைத்தியசாலை, பேருந்து நிலையம், முதன்மை வீதிகள் போன்ற பகுதிகளில் முன்னெடுக்கபட்டிருந்தது.

குறித்த செயற்திட்டம் டெங்கு ஒழிப்பினை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யபட்டிருந்ததுடன் பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.