(இரா.செல்வராஜா)
இந்து மதமும் பௌத்த மதமும் ஒன்றுப்பட்ட மதங்களாகும். கௌதம புத்தர் இந்துவாகவே பிறந்து இந்துவாகவே வளர்ந்து இந்துவாகவே திருமணம் செய்து இந்துவாகவே ஞானம் பெற்று வெளியேறினார். இதனால் அவரும் ஒரு இந்துவே ஆவார். இந்து மதத்திற்கும் பௌத்த மத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டை களைய வேண்டும் என அரச கரும மொழிகள், சமுக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.
சுங்கத் திணைக்கள இந்து ஊழியர் சங்கத்தின் பொன்விழா நேற்று மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் விழாவிற்கு ஓய்வு பெற்ற முன்னாள் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சிவஞானம் மகேஷன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மனோகணேசன் மேற்கண்டவாறு கூறினார்.
சுங்க திணைக்கள இந்து ஊழியர் சங்கத்தால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட 'இந்து மதம் எனக்கு கொடுத்த சந்தோசம்' என்ற தலைப்பிலான மாணவ மாணவிகளுக்கான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றிப்பெற்ற முதலாம், இண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு முறையே முதல் பரிசாக முப்பதாயிரம் ரூபாவும் இரண்டாம் பரிசாக இருபத்து ஐந்தாயிரம் ரூபாவும் மூன்றாம் பரிசாக இருபதாயிரம் ரூபாவும் ஆறுதல் பரிசாக போட்டியில் வெற்றிப்பெற்ற 27 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டதாக சங்கத்தின் பொருளாளர் சுங்க அதிகாரி கே.என். சன்முகதாசன் தெரிவித்தார்.
விழா குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற சுங்க திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் து.ரவீந்ரராஜா தனது பணியை சிறப்பாக செய்து முடித்திருப்பதாகவும் சுங்க அதிகாரி சன்முகநாதன் பாராட்டு தெரிவித்தார்.
பொன்விழாவின் போது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM