எமது அரசாங்கத்தில் அனைத்தும் சீர் செய்யப்படும் - கோத்தபாய 

By Vishnu

29 Sep, 2019 | 04:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகள் 90 சதவீதமாக விடுவிக்கப்பட்டன. அதுவரை காலமும் கைது செய்யப்பட்டிருந்த போராளிகளில்  12 ஆயிரம் பேருக்கு புனருத்தாபனம் அளிக்கப்பட்டது. மீகுதியாக இருந்த 264 போராளிகள் தொடர்பில் 2015ம் ஆண்டுக்கு பிறகு  புனருத்தாபனம் அளிக்கப்படவில்லை. எமது அரசாங்கத்தில் அனைத்தும் சீர் செய்யப்படும் என  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில்  உள்ள கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று இடம் பெற்ற  லங்கா சமசமாஜ கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரத்தையும்,  இறையான்மையினை பலப்படுத்தவும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. எவ்வித அடிப்படை கொள்கையும் இல்லாமல் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலைக்கு இன்று அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணம் அரசியல் பழிவாங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right