முச்சக்கரவண்டி ஒன்றினை கொள்வனவு செய்ய சென்றவர்கள் அது தரமாக உள்ளதா என்று பரீட்சித்துப் பார்க்க செலுத்தும் போது முச்சக்கரவண்டியின் முன்பக்க சில்லு கழன்று வீழ்ந்து முச்சக்கரவண்டி  விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

அம்பாறை பகுதியிலிருந்து ஓட்டமாவடிக்கு முச்சக்கரவண்டிஒன்றினை கொள்வனவு செய்ய வந்த குழுவினர் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கரவண்டியை செலுத்திப் பார்க்கும் போதே சில்லு கழன்றதில் இவ் விபத்து இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியில் இடம்பெற்ற இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் கீழ்ப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு பயணித்தோர் எவருக்கும் காயங்களின்றி தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.