பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்றைய தினம் வடமாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இவ் விஜயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழவொன்று நாளை(இன்று) கிளிநொச்சிக்குச் செல்வவுள்ளது. கிளிநொச்சியில் பொதுஜனபெரமுனவின் அலுவலகத்தினை திறந்து வைப்பதற்காகவே இக்குழு செல்கின்றது. கிளை அலுவலகம் காலை 10 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அருகில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். மேலும் தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் போலி வாக்குறுதிகளுக்குள் சிக்கிக்கொள்ளாது சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம் என்றார்.