முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ஷ­விற்கு கடந்த காலத்தில் இரு யானைக்­குட்­டி­கள் வழங்கப்பட்டமை தொடர்­பாக முழு­மை­யான விசா­ரணை ஆரம்­ப­மா­கி­யுள்­ள­தாக சட்டமா அதிபர் கொழும்பு பிர­தா­ன ­நீ­தி­மன்ற நீதிவான் கிஹான் பிலப்­பிட்­டி­ய­விற்கு அறி­வித்­துள்ளார். 

கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­ உள்­ளிட்ட மேலும் இரு­வ­ருக்கு வழங்­கப்­பட்ட நான்கு யானைக் குட்­டிகள் தொடர்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தாக சட்­டமா அதிபர் சார்பில் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட அரச சட்­ட­வாதி திலீபா பீரிஸ் நீதி­வா­னிடம் தெரி­வித்­துள்ளார்.

சட்டவிரோ­த­மாக வைத்­துக்­கொள்­ளப்­பட்ட 20 யானைக்குட்­டிகள் அடுத்து வரும் இரு வாரங்­களில் மீட்கப்­படும் எனவும் இதன் போது அவர் தெரி­வித்தார். இவ்­வாறு கைப்­பற்றப்­படும் யானைக் குட்­டி­களை உட­வ­ளவ தேசிய பூங்­காவில் விஷேட தடுப்பில் வைக்கவுள்­ள­தா­கவும், அது தொடர்­பி­லான பணிகள் 75 வீதம் நிறைவுபெற்­றுள்­ள­தா­கவும் சட்­டத்­த­ரணி திலீபா பீரிஸ் மன்­றுக்கு அறி­வித்தார். இத­னி­டையே இலங்­கையின் சட்­டங்­களின் படி நிறை­வேற்று அதி­கா­ரங்­களை கொண்ட ஜனா­தி­ப­திக்கு தனது விருப்­பங்­க­ளிற்கு ஏற்ப யானை­களை வழங்­கு­­வ­தற்­கான அதி­கா­ரங்கள் இல்லை.

நிறை­வேற்று அதி­கா­ரங்­க­ளை­க்கொண்ட ஜனா­தி­பதி அதனை செய்­தி­ருந்தால் அது சட்­டத்தின் கீழ் சட்­ட­வி­ரோ­த­மான செயல் என்றே கரு­தப்­படும்.

சட்டவிரோதமாக யானைகளை வைத்தி ருந்த குற்றச்சாட்டுக்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி, பௌத்தமதகுரு உட்பட 35 பேர் விசாரிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.