சூழலுக்கு பாதுகாப்பான வலு மீது இலங்கை காண்பிக்கும் அர்ப்பணிப்பு கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. 

நிலைபேறான சூழலுக்கு பாதுகாப்பான வலுவை கொண்டிருப்பது எனும் தேசத்தின் திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கும் வகையில், நவலோக பவர் சொலூஷன்ஸ், சூரிய சக்தியில் இயங்கும் கொதி நீர் கட்டமைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

மிஹிந்தலை, முல்லைத்தீவு, மஹியங்கனை, யாழ்ப்பாணம் மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள பொது மேற்பார்வை மற்றும் உள்ளக விவகார அமைச்சின் ஆறு பங்களாக்களில் தலா 10 10kw வலுக் கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் நேவ Net meter களை இணைத்துள்ளது. இதன் மூலம் மின்பாவனை கட்டணங்களை குறைத்தல் மற்றும் சூழல் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

Net meter முறை மூலமாக சூரியனின் வலுவை இலகுவாக உள்வாங்கும் திறன் மற்றும் எளிமையான முறையில் செயற்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அதனை தூய்மையாக்கி, புதுப்பிக்கக்கூடிய வலுவாக மாற்றுகிறது. இதன் மூலமாக தேசத்துக்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறைக்கப்படுகிறது.

Net metering முறை மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தமக்கு அவசியமான மின்சாரத்தை சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்து, அவற்றை தேசிய மின் கட்டமைப்புக்கு செலுத்தி மேலதிக வலுவை தேவையான போது பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது. 

நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் “தேறிய” மின்சார வலுவுக்கு மட்டுமே கட்டணம் அறவிடப்படுவர். சூரிய வலுக் கட்டமைப்பினால் பிறப்பிக்கப்படும் வலுவின் அளவு மற்றும் மாதாந்தம் பயன்படுத்தப்படும் மின்வலுவின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இந்த அளவு வேறுபடும்.

Net metering முறையானது அமைச்சின் பங்களாக்களில் பதியப்பட்டுள்ளதுடன் இலங்கையின் தூர நோக்கிலமைந்த வலுப் பிறப்பாக்கல் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன் புதுப்பிக்கக்கூடிய வலுவுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

நவலோக பவர் சொலூஷன்ஸ் பொது முகாமையாளர் அசேல மென்டிஸ் கருத்து தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சூழலுக்கு பாதுகாப்பான வலு மூலங்களை பயன்படுத்துவது எனும் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம். இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளதுடன் நாம் பெருமையடைகிறோம். நவலோக சூரியசக்தி கட்டமைப்பின் தனது net metering தீர்வுகள் மூலமாக மின்சார செலவீனத்தில் குறைவை ஏற்படுத்த பெருமளவு பங்களிப்பு வழங்குவதுடன்ரூபவ் சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏனைய நிறுவனங்களுடன் பணியாற்றுவதற்கு நாம் எதிர்பார்ப்பதுடன்ரூபவ் புதுப்பித்தல் வலுவின் வளர்ச்சியை தொடர்ந்து ஏற்படுத்தவும் சூழலுக்கு அதன் மூலம் நேர்த்தியான பங்களிப்பை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்” எனக்குறிப்பிட்டார்.

நாட்டின் பெருமைக்குரிய வர்த்தக நாமங்களில் ஒன்றான நவலோக, தனது சூரியசக்தி கட்டமைப்புகளின் மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வலுத்தீர்வுகளை நம்பிக்கையுடன் வழங்கி வருகிறது.

நவலோக சூரியசக்தி கட்டமைப்பு net metering முறை மூலமாக நுகர்வோருக்கு, அதிகரித்துச் செல்லும் மின்சாரக் கட்டணத்தை குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்வு வழங்கப்படுவதுடன் சூழலுக்கு பாதுகாப்பான செயற்பாடுகளில் பங்கேற்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தொழிற்துறைசார் நுகர்வோருக்கு இந்த கட்டமைப்பு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன் இவர்களின் மாதாந்த மின்சாரக் கட்டணப்பட்டியல் என்பது தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளது. சூழல் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதுடன் தமது எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக நவலோக நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலொசனைகளை நாடவும் முடியும்.

நவலோக சூரியகல கட்டமைப்புகளின் மூலமாக இலவசமாக களத்துக்கு விஜயம் செய்து மதிப்பீடுகள் வழங்கப்படுவதுடன் மாதாந்தம் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு பற்றிய ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பொருத்தமான சூழலுக்கு பாதுகாப்பான கொள்கைகள் வழங்கப்படுவதுடன்ரூபவ் நுகர்வோர் சார்பாக சகல அனுமதிகளையும் பெற்றுக் கொள்வதுடன் சிக்கல்கள் இல்லாத வகையில் பொருத்துகைகளையும் பயன்படுத்தல் வழிகாட்டல்களையும் மேற்கொள்கிறது.

உள்நாட்டு சந்தையில் வழங்கப்படும் net metering கட்டமைப்புகளுடன் ஒப்பிடுகையில்ரூபவ் நவலோகவின் நம்பிக்கையை வென்ற விற்பனைக்கு பிந்திய சேவை உடன் 25 வருட கால உத்தரவாதமும் இந்த கட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றமையின் மூலமாகரூபவ் நிலைபேறான பாதுகாப்பான எதிர்காலத்துக்கான உறுதி மொழியை வழங்குகிறது.