(மயூரன் )

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர்.

மாணவியின் தாயார் கடந்த 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது தன்னை சந்தேகநபர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து மிரட்டியதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற நீதிவான் வித்தியாவின் தாயாரை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்த முறைப்பாட்டையடுத்து ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று சந்தேகநபர்களின் உறவினர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது