(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான  வைத்தியர்  சேகு ஷிஹாப்தீன்  மொஹம்மட் ஷாபி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சட்ட விரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டமை, முறையற்ற வகையில் நிதி சேகரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தாம் தடுத்து வைத்திருந்தமையை ஆட்சேபித்து, வைத்தியர் ஷாபி தாக்கல் செய்த மனுவே இவ்வாறு இன்றைய தினம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.