இந்திய இராணுவ ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியதில் இருவர் பலி!

Published By: Vishnu

27 Sep, 2019 | 05:53 PM
image

இந்திய இராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பூட்டானில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் சீத்தா என்ற ஹெலிகொப்டரே இவ்வாறு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மேற்படி ஹெலிகொப்டர் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் கிர்மூவிலிருந்து பூட்டானின் யோங்க்ஃபூல்லா பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பூட்டானில் நிலவிய மோசமான வானிலை காரணாக இந்திய நேரப்படி சரியாக ஒரு மணியளவில் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பை இழந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் இந்திய விமானி மற்றொருவர் பூட்டான் நாட்டை சேர்ந்த விமானி. 

பூடான் நாட்டை சேர்ந்த விமானி இந்திய இராணுவத்தில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பூட்டான், ஹெலிகொப்டர், Bhutan, helicopter

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனத் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் தீவிபத்து:...

2026-09-11 09:12:23
news-image

இந்தோனேஷிய எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச்...

2026-09-10 15:49:51
news-image

உலக சுகாதார ஸ்தாபன பிராந்தியப் பணிப்பாளர்...

2026-09-10 14:58:27
news-image

இந்தியாவில் எதிர்வரும் 12, 13ல் 18வது...

2026-09-10 13:21:50
news-image

உலகின் அதிக வெப்பமான மாதமாக ஆகஸ்ட்...

2026-09-10 12:27:36
news-image

இடைத்தேர்தல் வெற்றி வாக்குறுதி : அமெரிக்கர்களுக்கு...

2026-09-10 11:15:10
news-image

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ –...

2026-09-10 09:51:21
news-image

சிரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிப்பு...

2026-09-10 13:03:12
news-image

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான்...

2026-09-09 17:29:09
news-image

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட...

2026-09-09 14:34:06
news-image

“சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது...

2026-09-09 12:21:47
news-image

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு:...

2026-09-09 12:22:31