தினத்தந்தி குழுமம் - வீரகேசரி மற்றும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து வழங்கும் மருத்துவ கண்காட்சி

Published By: Digital Desk 3

27 Sep, 2019 | 05:06 PM
image

தினத்தந்தி குழுமம், வீரகேசரி ஆகியோர் இணைந்து ‘மெட் டெஸ்டினேஷன் இந்தியா எக்ஸ்போ-2019‘ என்ற மருத்துவ கண்காட்சியை கொழும்பில் அக்டோபர் 4 மற்றும் 5 திகதிகளில் நடத்த உள்ளார்கள்.

அக்டோபர் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு சர்வதேச கருத்தரங்க மண்டபத்தில் (பி.எம்.ஐ.சி.எச்) உள்ள நுகசேவன ஹாலில் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

தினத்தந்தி குழுமம் - வீரகேசரி மற்றும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த மருத்துவ கண்காட்சியில், அகர்வால் கண் மருத்துவமனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை - ஆய்வு மையம் மற்றும் சுதா மருத்துவமனை ஆகியோர் உடன் இணைந்து பங்கேற்கிறார்கள்.

உலக அளவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஓமான், மாலைத்தீவுகள், உஸ்பெக்கிஸ்தான், சூடான், ஈராக், ஏமன் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாட்டவர்களும் இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா நோக்கில் வருகை புரிந்து தங்கள் உடல் பிணிகளுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவ கண்காட்சியில் இந்தியாவில் அளிக்கப்படும் உயர் தொழில்நுட்பம் கொண்ட மருத்துவ சிகிச்சை முறைகள், மருத்துவ ரீதியான உள்கட்டமைப்பு வசதிகள், தரமான மருத்துவ ஆலோசனைகள் ஆகிய வசதிகள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்து பயன் பெறலாம். இந்தியாவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளின் சிகிச்சைகளுக்கு ஈடாக இருப்பதுடன், மருத்துவ செலவு அந்த நாடுகளை விட குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது.

இதுவரையில் உலகநாடுகளிலிருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா மேற்கொண்டு சிகிச்சை பெற்று சென்றிருக்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கு வருகை தருபவர்கள் எலும்பு மற்றும் மூட்டு இயல், கண் மருத்துவம், இதய அறுவை சிகிச்சை, குழந்தைப் பேறின்மைக்கான சிகிச்சை, குடல் உள் நோக்கு மருத்துவம், நீரிழிவு நோய் இயல், புற்று நோய் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பல் மருத்துவம், பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்களை சந்திக்கலாம். அவற்றின் அடிப்படையில் மருத்துவ சுற்றுலா மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றிய சகல தகவல்களையும் அறிந்து கொண்டு, எளிதாக இந்தியாவுக்கு சென்று தேவையான மருத்துவ சிகிச்சையையும் பெற்றுக்கொள்ள இயலும்.

மருத்துவக் கண்காட்சியின் சிறப்பம்சமாக, இந்தியா-இலங்கை நாடுகள் நல்லுறவின் அடிப்படையில் இணைந்து பங்கேற்கும் சிறப்பு மருத்துவ ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 5-ம் திகதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள நுகசேவன அரங்கில் நடைபெறவுள்ளது.

இன்றைய காலகட்ட அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ள இந்த சிறப்பு கூட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பிரிவினர்களும் பங்கேற்று பயனடையலாம்.

இந்த மருத்துவ கண்காட்சியில் பங்கேற்பது பற்றிய தகவல்களை நேரில் அல்லது https://www.iadsandevents.com/medestination-india-expo-2019/ என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2024-07-20 17:22:18
news-image

வெலிமடை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்,...

2024-07-21 15:48:07
news-image

றொசில்டா அன்டனின் 'ஓய்ந்த பின்பும் ஓயாத...

2024-07-20 19:31:09
news-image

ஸ்ரீ வராஹி உபாசகர் குருஜி ஆனந்தன் ...

2024-07-20 15:37:03