பொலிஸ் திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு

By Daya

27 Sep, 2019 | 04:40 PM
image

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

பொலிஸ் திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து மேலும் தரமான பொலிஸ் சேவையை ஸ்தாபிப்பதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தலைமையில் மாதந்தோறும் இச்சந்திப்பு இடம்பெற்றுவருவதுடன், கடந்த சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

அதிகாரிகளின் ஆரோக்கிய நிலைமை தொடர்பில் பரீட்சிப்பதற்கான வேலைத்திட்டங் களுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் ஒதுக்கீடுகளை மேற்கொள்ளு தல், பொலிஸ் வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர்களின் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு துரிதமாக வைத்தியர்களை  இணைத்துக்கொள்ளுதல் மற்றும் இலங் கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள முரண்பாடு களை நீக்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி கப்பம் பெறுதலை கட்டுப்படுத்துதல், சிறைச் சாலைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

ஆபத்தான கடற்கரையோரங்களில் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகளை அண்மித்த கடல்களில் மூழ்குவதால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக் கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

பதிற் கடமை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின்  சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33