இன்று கூகுள்  தனது 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடடுகிறது.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி முதன் முதலில் கூகுள் தேடல் இயந்திரத்தின் அலுவலகம் திறக்கப்பட்டது. அமெரிக்காவில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தை லரியி பேஜ் (Larry Page) மற்றும் செர்ஜி பெரின் (Sergey Brin) ஆகியோர் நிறுவினார்கள்.

கூகுள் வருவதற்கு முன்பு இணைய தேடலில் முன்னணியில் இருந்த சில நிறுவனங்கள், கூகுளின் எழுச்சியால் காணாமல் போய்விட்டது. 

கூகிள் தனது பிறந்த திகதியை பல முறை மாற்றியுள்ளது. ஆரம்பத்தில், 2005 வரை அதன் பிறந்த நாள் செப்டம்பர் 7 ஆம் திகதி கொண்டாடப்பட்டது, பின்னர் செப்டம்பர் 8, செப்டம்பர் 26 அன்று கொண்டாடப்பட்டது, மேலும் தற்போது அதன் பிறந்த நாள் செப்டம்பர் 27 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று தனது பிறந்த நாளையே டூடுலாக வைத்துள்ளது. பழைய கணினி திரையில், தொடக்க காலத்தில் இருந்த கூகுள் லோகோ உடன் கூடிய முகப்பு பக்கத்தை காண்பிக்கும் டூடுல் பயனர்களை பழைய நினைவுக்கு அழைத்து செல்கிறது.