இலங்கையில் சட்டவாட்சியை நிலைநாட்டவும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத் தவும் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த தேரர்கள் நடந்துகொண்ட விதத்திற்குக் கண்டனம் தெரிவித்ததுடன், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மகாவலி எல்வலயத்தினால் தமிழர்களது காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தும், திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் பௌத்தர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் சட்டவாட்சியை நிலைநாட்டவும், சிறுபான்மை யினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஐ.நாவின் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்த துடன்,  வவுனியா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் ஒன்றினையும் வழங்கியிருந்தனர்.