வீடு பெறுவதற்காக 23 முறை திருமணம் செய்து மோசடி

Published By: Digital Desk 3

27 Sep, 2019 | 03:17 PM
image

சீனாவில் அரசு தரும் வீட்டை பெறுவதற்காக ஒரே மாதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 23 முறை தங்களுக்குள் மாறி மாறி திருமணம் செய்து விவகாரத்து செய்துள்ள சம்பவம ் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் மேம்பாட்டுத்திட்டத்துக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் 40 சதுர மீட்டரில் அங்கு வசித்தவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தின் வசித்தவராக பதிவு செய்யப்பட்ட ஷி, அரசு தரும் புதிய வீட்டை பெற திருமண ஆவணங்கள் தேவைப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் தனது முன்னாள் கணவர் பானை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

ஆறு நாட்களுக்கு பின்பு வீட்டுக்கான ஒப்புதல் கிடைத்ததும் தம்பதி மீண்டும் விவகாரத்து பெற்றனர். இதோடு பான் நிறுத்திவிடாமல் 15 நாட்களுக்குள் தனது மைத்துனியையும் அவரது சகோதரியையும் அடுத்தடுத்து திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார்.

மேலும் வீடு பெறுவதற்காக ஷி தனது மற்றொரு முன்னாள் கணவரையும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் உறவினர்கள், அண்ணன், தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், 23 முறை திருமணம் செய்து விவகாரத்து பெற்றுள்ளனர். இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து தகவல் அறிந்த பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பான் குடும்பத்தினர் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பான், அவரது மனைவி மற்றும் தந்தை உள்பட 11 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்த 4 பேரைத் தவிர, மற்ற 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right