இலங்­கையின் விளை­யாட்­டுத்­துறையை மேம்­ப­டுத்த தேவை­யான அனைத்து உத­வி­களையும் வழங்­கு­வ­தற்கு இ­லங்­கைக்­கான பாகிஸ்தான் தூதுவர் சயீட் ஷாகில் உசைன் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற, விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகி­யோ­ருடன் இலங்­கைக்­கான பாகிஸ்தான் தூதுவர் சயீட் ஷாகில் உசைன் சந்தித்துப் பேசினார். இதன்­போதே இலங்­கைக்கு விளை­யாட்­டுத்­து­றையை ஊக்­கு­விக்க உத­வி­களை வழங்கத் தயா­ராக இருப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்கோஸ், மேசைப்­பந்து, டென்னிஸ், பிலியர்ட்ஸ், ஸ்னூக்கர் உள் ­ளிட்ட விளை­யாட்­டுக்­க­ளுக்கு தேவை­யான பயிற்­சிகள் மற்­றும் ­தொ­ழில் நுட்பம், ஆலோ­ச­னை­களை பாகிஸ்தான் வழங்கும் என்றும், எதிர்­கா­லத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கைகோர்த்து ஆஷஸ் கிண்ண கிரிக் கெட் தொடர் ஒன்­றையும் இலங்­கை­யில் நடத்த முடியும் என்றும் தெரி­வித்துள்ளார்.

பாகிஸ்தான் தூதரின் இக்­க­ருத்­திற்கு விளை­யாட்­டுத்­துத்­துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.